×

குஜராத் மாநிலம் அமரேலி மாவட்டத்தில் 50 அடி ஆழம் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது!!

அகமதாபாத் : குஜராத் மாநிலம் அமரேலி மாவட்டத்தில் 50 அடி ஆழம் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது. குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள சுர்கப்பாரா கிராமத்தில் தொழிலாளர்கள் வயலில் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டு இருந்த போது, ஆழ்துளை கிணற்றின் மேல் வைக்கப்பட்டு இருந்த கல்லை, அங்கிருந்த குழந்தைகள் அகற்றி உள்ளனர். இதனால் அங்கு விளையாடி கொண்டிருந்த ஆரவி என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது.

நேற்று பிற்பகல் 12.30 மணி அளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் சுமார் 50 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்ட குழந்தையை மீட்கும் பணியை மாவட்ட தீயணைப்புத் துறையினர் மற்றும் அவசர சேவை பணியாளர்கள் அடங்கிய மீட்புக்குழுவினர் மேற்கொண்டனர்.

ஆழ்துளை கிணற்று வழியாக குழந்தைக்கு தேவையான ஆக்சிஜன் வழங்கப்பட்ட நிலையில், குழந்தையை மீட்கும் 17 மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது.இரவு பகலாக நீடித்த மீட்பு பணியில், அதிகாலை 5 மணி அளவில் குழந்தை மயக்க நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் கொண்டுசெல்லப்பட்ட நிலையில், குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post குஜராத் மாநிலம் அமரேலி மாவட்டத்தில் 50 அடி ஆழம் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது!! appeared first on Dinakaran.

Tags : Amareli district of Gujarat ,Ahmedabad ,Amreli District, Gujarat State ,Surkapara ,
× RELATED தீ விபத்து நடந்த பள்ளி மூடல் குஜராத் அரசு நடவடிக்கை