×

காஷ்மீரில் காவல் அதிகாரிகளை தாக்கியதாக ராணுவம் மீது வழக்கு

ஸ்ரீநகர்: காஷ்மீரில் , சிறப்பு காவல் அதிகாரி மற்றும் காவலரை தாக்கியதாக ராணுவத்தினர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர், குப்வாராவில் உள்ள காவல் நிலையத்தில் சிறப்பு காவல் அதிகாரிகள் ரயீஸ் கான்,இம்தியாஸ் மாலிக்,காவலர்கள் சலீம் முஸ்தாக், ஜகூர் அகமது நேற்றுமுன்தினம் காவல் நிலையத்தில் இருந்தனர். அப்போது, ராணுவ வீரர்கள் காவல் நிலையத்துக்கு உள்ளே வந்து அங்கிருந்த சிறப்பு காவல் அதிகாரி, காவலர்களை தாக்கினர். இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுபற்றி காவல் துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில் ராணுவத்தினர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

ஆனால் அதிகாரிகள் சிலர் கூறுகையில், குப்வாராவில் ஒரு வழக்கு தொடர்பாக பிரதேச ராணுவ அதிகாரி வீட்டில் காவல்துறை சோதனை நடத்தியது. இது ராணுவத்தினருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதன் பின் காவல்நிலையம் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர் என்று தெரிவித்தன. ஆனால், காவல் நிலையத்தில் தாக்குதல் எதுவும் நடக்கவில்லை என்றும் காவல்துறையினருக்கும், ராணுவத்தினருக்கும் சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. இந்த பிரச்னை சுமூகமாக தீர்க்கப்பட்டது என ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

The post காஷ்மீரில் காவல் அதிகாரிகளை தாக்கியதாக ராணுவம் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Kashmir ,Srinagar ,Raees Khan ,Imtiaz Malik ,Salim Mushtaq ,Zakur Ahmed ,Kupwara, Jammu and ,Dinakaran ,
× RELATED ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை