×

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கமான சென்னை உணவு பாதுகாப்பு அதிகாரி அதிரடி சஸ்பெண்ட்: புதிய அதிகாரியாக ஜெகதீஷ் சந்திரபோஸ் நியமனம்

சென்னை: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கமான சென்னை உணவு பாதுகாப்பு அதிகாரி அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். புதிய அதிகாரியாக ஜெகதீஷ் சந்திரபோஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை உணவு பாதுகாப்பு அதிகாரியாக இருந்த சோமசுந்தரம் மீது ஏராளமான புகார்கள் வந்ததால், அந்த துறையின் கமிஷனரான செந்தில்குமார், அவரை சஸ்பெண்ட் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரியாக இருந்த ஜெகதீஷ் சந்திரபோஸ், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவையும் கமிஷனர் செந்தில்குமார் பிறப்பித்துள்ளார். மேலும், சோமசுந்தரம், சஸ்பெண்ட் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சோமசுந்தரம், மதுரையில் பணியாற்றி வந்துள்ளார். இவர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருங்கிய நண்பர் என்று கூறப்படுகிறது. இதனால் கடந்த பிப்ரவரி மாதம் மதுரையில் இருந்து சென்னைக்கு மாறுதலாகி வந்தார். சென்னைக்கு வந்ததும், கொரோனா சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகள் தங்கியுள்ள ஓட்டல்களுக்கு அரசு செலுத்த வேண்டிய தொகையை தருவதற்கு 30 சதவீதம் வரை கமிஷன் வாங்கியுள்ளார். அதன்பின்னர் கடந்த சில நாட்களாக கமிஷன் தராத ஓட்டல்களில் டாக்டர்கள், நர்சுகளை தங்க வைக்காமல் அதிக கமிஷன் தரும் ஓட்டல்களில் தங்க வைத்துள்ளார். அதில் பல ஓட்டல்கள் அதிக தூரம் உள்ளவையாக உள்ளது. மேலும் டாக்டர்கள், நர்சுகளுக்கு தரமற்ற உணவும் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, புதிதாக பொறுப்பேற்றுள்ள கமிஷனர் செந்தில்குமாருக்கு தெரியவந்தது. அதை தொடர்ந்துதான் சோமசுந்தரத்தை சஸ்பெண்ட் செய்து உணவு பாதுகாப்புத்துறை கமிஷனர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது….

The post முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கமான சென்னை உணவு பாதுகாப்பு அதிகாரி அதிரடி சஸ்பெண்ட்: புதிய அதிகாரியாக ஜெகதீஷ் சந்திரபோஸ் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister ,Vijayabaskar ,Jagdish Chandrabos ,Jagadesh ,Safety ,Dinakaraan ,
× RELATED ரூ.100 கோடி நில மோசடி வழக்கில்...