×

ஒன்றிணைய வேண்டும்

மூன்றாம் உலகப் போருக்காக சீனா தயாரித்த உயிரி ஆயுதமே கொரோனா வைரஸ் கிருமி என பிரபல அரசியல் நிபுணர் கிரஹாம் ஆலிசன் உள்ளிட்ட அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், உலக சுகாதார நிறுவனமோ, கொரோனா  வைரஸ் செயற்கையாக உருவாக்கப்பட்டதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என மறுத்துள்ளது. இவ்விஷயத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் செயல்பாடு பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளன.  கொரோனா பலியில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் அமெரிக்கா, சீனாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகிறது. சீனாவுடன் மோதலை விரும்பவில்லை. போட்டியைத் தான் அமெரிக்கா விரும்புகிறது என சமீபத்தில் அதிபர் ஜோ  பைடன் கூறியது பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது. நம்பர் 1 இடத்தில் இருப்பது அமெரிக்காவா அல்லது சீனாவா என குழப்பம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் சீனாவை கடுமையாக விமர்சனம் செய்து, நேரடியாக  எச்சரிக்கை செய்தார். ஆனால், அதிபர் ஜோ பைடன் மென்மையான போக்கை கடைப்பிடித்து வருகிறார். இது நல்லதல்ல. சர்வதேச அளவில் அமெரிக்காவின் செல்வாக்கு குறைந்து கொண்ேட வருகிறது. சீனாவின் அதிகாரம் அதிகரித்துள்ளது. வடகொரியா மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகளுடன் மோதல் போக்கை கடைப்பிடித்த அமெரிக்கா, அவர்கள் மீது போர்  தொடுக்கவில்லை. போர் தொடுத்தால், வெற்றி பெற வேண்டும். இல்லாவிட்டால், கடும் பாதிப்புக்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது அமெரிக்காவுக்கு தெரியும். சிறிய நாடுகளை அச்சுறுத்தி உலக நாடுகளை பயமுறுத்தும் வேலையில்  அமெரிக்கா இறங்கியது. இது வெற்றியை தரவில்லை. சீனா, பெரிய நாடுகளுடன் மோதும் போக்கை கையில் எடுத்துள்ளது. இதனால் சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க பல நாடுகள் தயங்குகின்றன. நவீன ஆயுதம், போர் விமானம் மற்றும் ராணுவ வீரர்கள் மூலம் எதிரி நாட்டை அழிக்கும் நிலை மாறி விட்டது. வைரஸ் மூலம், நாட்டின் வளர்ச்சியை பாதிக்க செய்வது, உயிர் பலிகள் ஏற்படுத்துவதன் மூலம் நினைத்ததை சாதிக்க முடியும்  என்பதை கொரோனா உணர்த்தி வருகிறது. கொரோனா காலக்கட்டத்தில் உலக நாடுகள் வீழ்ச்சியை சந்தித்தபோது, சீனா மட்டும் அசுர வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகிறது. நம்பர் 1 இடத்திற்கு சீனா வந்தால், அடுத்த தலைமுறையினர் சீனாவுக்கு அடிபணிந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படும். முக்கியமாக, சண்டையிடாமல் அச்சுறுத்தல் மூலம் பல நாடுகளை கட்டுக்குள் கொண்டு வரும் என்பதை உலக நாடுகள்  உணர வேண்டும். எந்த ஒரு நாடும் தனியாக நின்று சீனாவை எதிர்க்க முடியாது. தற்போது, சீனாவை எதிர்க்கும் மனநிலையில் அமெரிக்கா இல்லை.  இந்தியா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஜப்பான், ெஜர்மனி, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஒன்றிணைந்து, சீனாவுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்க வேண்டும். கொரோனா விஷயத்தில் உண்மையை வெளிப்படுத்தும் முயற்சியில்  சீனாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அப்போது தான் சீனாவின் அடாவடி, அதிகார போக்கை கட்டுப்படுத்த முடியும்….

The post ஒன்றிணைய வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Graham ,China ,third world war ,
× RELATED வடக்கன்குளம் எஸ்ஏவி பள்ளியில் திருவாசகம் முற்றோதுதல்