×

இன்ஸ்டாவில் ரீல்ஸ் பாடல் வெளியிட்ட வார்னர்: மனைவி கிண்டல்

சிட்னி: ஐபிஎல் தொடர் கொரோனா அச்சத்தால் பாதியில் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் வீரரான ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர்,  நாடு திரும்பி  14 நாள் தனிமைப்படுத்தலில் ஓட்டல்  அறையில் உள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் வார்னர், இந்திய திரைப்படங்களின் சீன்களையும், பாடல்களையும் அவர் இன்ஸ்டா ரீல்களாக செய்து பதிவிட்டு வருகிறார். சில தினங்களுக்கு முன் தனுஷ் நடிப்பில் வெளியான ரவுடி பேபி பாடலுக்கு ரீல் செய்து வெளியிட்டது வைரலானது. இந்நிலையில் தெலுங்கு சினிமாவுக்கு தாவி உள்ளார்.

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘ராமுலோ ராமுலா’ பாடலுக்கு ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். இந்நிலையில் வார்னரின் மனைவி கேண்டிஸ், கணவரை வெளிப்படையாக கிண்டலடித்துள்ளார். வார்னரின் வீடியோவுக்கு கீழ் கமெண்ட் செய்துள்ள கேண்டிஸ் , குவாரண்டைன் நாட்களில் உங்களுக்கு பொழுது போகவில்லையா என சிரிப்பு எமோஜிகளை பதிவிட்டுளார். இதற்கு பதிலளித்துள்ள வார்னர், உனது கஷ்டம் தற்போது தான் எனக்கு புரிகிறது என தெரிவித்துள்ளார்.


Tags : Warner ,Reels , Warner releases reels song on insta: wife teased
× RELATED சாலையில் ஆபத்தான முறையில் பைக் வீலிங்...