×

தடுப்பூசி 2 டோஸை முடித்தாலும் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி அவசியம்: டாக்டர் ரந்தீப் குலேரியா கருத்து

டெல்லி: தடுப்பூசி 2 டோஸை முடித்தாலும் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டியது அவசியம் என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு தடுப்பு மையமான சிடிசி சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தடுப்பூசி முழுமையாக எடுத்துக்கொண்டவர்கள் நீண்டகாலம் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தது. அத்துடன் பேரிடர் காலத்திற்கு முன்னர் எப்படி இருந்தீர்களோ அதேபோன்று செயல்படலாம் என்றும் அறிவித்தது.

இதனை மறுக்கும் விதமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா கருத்து வெளியிட்டுள்ளார். அதில் 2 தடுப்பூசி 2 டோஸை முடித்தாலும் உருமாறும் தொற்றில் இருந்து தப்பிக்க முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகமிக முக்கியம் என தெரிவித்துள்ளார்.

இந்தியர்கள் ஒவ்வொருவரும் கிடைக்கும் நேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்வது மிகவும் அவசியம் என கூறியுள்ள குலேரியா உருமாறிய தொற்றில் இருந்து தப்பிக்க தற்போதுள்ள தடுப்பூசிகள் எந்த அளவிற்கு உதவும் என நிச்சயமாக தெரியவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பான தெளிவான புள்ளி விவரங்கள் கிடைக்கும் வரை முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியே நம்மை பாதுகாக்கும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.Tags : Randeep Gularia , vaccine
× RELATED கொரோனா 3-ம் அலை; 6 முதல் 8 வாரங்களில்...