×
Saravana Stores

கொரோனா 3-ம் அலை; 6 முதல் 8 வாரங்களில் இந்தியாவில் எதிர்கொள்ளக்கூடும்: எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா பேட்டி

டெல்லி: 6 முதல் 8 வாரங்களில் இந்தியா மூன்றாவது அலையை எதிர்கொள்ளக்கூடும் என எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா கூறியுள்ளார். பெரும்பாலான மாநிலங்கள் பொது முடக்கத்திலிருந்து தளர்வுகள் கொடுத்து வருகின்றன. இச்சூழலில், மக்கள் முதல் இரண்டு அலைகளிலும் எவ்விதப் பாடமும் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிப்பதில்லை. முக கவசம் முறையாக அணிவதில்லை. அதனாலேயே, மூன்றாவது அலையை இந்தியா எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடி எழலாம் என கூறினார். 
6 முதல் 8 வாரங்களில் இந்தியா மூன்றாவது அலையை எதிர்கொள்ளலாம். தேசிய அளவில் இந்த எண்ணிக்கை வெளிப்படையாகத் தெரிய சற்று காலமாகலாம். ஆனால் இப்போதிருந்தே அதன் பாதிப்பு ஆரம்பித்திருக்கும் என்று கருதுகிறேன். மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாவிட்டால் நிச்சயமாக மூன்றாவது அலையைத் தவிர்க்க முடியாது” என கூறினார். தமிழகத்தில் கொரோனா 3-ம் அலையை எதிர்கொள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கை வசதிகள், மருத்துவர்கன் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.

The post கொரோனா 3-ம் அலை; 6 முதல் 8 வாரங்களில் இந்தியாவில் எதிர்கொள்ளக்கூடும்: எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா பேட்டி appeared first on Dinakaran.

Tags : Corona 3rd wave ,India ,AIIMS ,president ,Randeep Gularia ,Delhi ,third wave ,Aims ,
× RELATED மதுரை எய்ம்ஸ் 2025 டிசம்பரில் வகுப்புகள் துவக்கம்