×
Saravana Stores

தீபாவளியை ஒட்டி கட்டட தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.5,000 வழங்கப்படும்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: தீபாவளியை ஒட்டி கட்டட தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.5,000 வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். நாடு முழுவதும் வரும் 31ம் தேதி தீபாவளி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. பொதுமக்களின் பொருளாதார நிலையை சீர்படுத்தும் வகையில் ஒன்றிய, மாநில அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்து வருகிறது.

இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு புதுச்சேரியில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது; கட்டிட தொழிலாளர்களுக்கு ரூ.5,000 மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.1,500ம் தீபாவளி போனசாக அறிவித்து முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் ரூ.1000 மதிப்புள்ள 10 பொருட்கள் அடங்கிய தொகுப்பு, மானிய விலையில் ரூ.500க்கு விற்பனை செய்யப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

கான்பெட் நிறுவனம் மூலம் தீபாவளியை முன்னிட்டு புதுச்சேரி மக்களுக்கு மானிய விலையில் 10 பொருட்கள் வழங்கப்படவுள்ளன. ரூ.1000ம் மதிப்புள்ள பொருட்களை ரேஷன் கார்டுகளை காட்டி தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விற்பனை மையத்தில் ரூ.500 மானிய விலையில் பெற்றுக்கொள்ளலாம். விரைவில் அந்த 10 பொருட்கள் பற்றிய விவரம் தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post தீபாவளியை ஒட்டி கட்டட தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.5,000 வழங்கப்படும்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Pune ,Puducherry ,Rangasamy ,Diwali ,Chief Minister ,Union ,Rangasami ,Dinakaran ,
× RELATED தீபாவளியை ஒட்டி கட்டட...