×

பின்லாந்து நாடாளுமன்ற தேர்தல்: பிரதமர் சன்னா மரீன் கட்சி தோல்வி

ஹெல்சின்கி: பின்லாந்து தேர்தலில் பிரதமர் சன்னா மரீனின் கட்சி படுதோல்வியடைந்துள்ளது. எதிர்க்கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பின்லாந்தில் பிரதமராக சன்னா மரீன் ( 37)பதவி வகிக்கிறார். மிக இளம் வயதில் பிரதமர் பதவிக்கு வந்த அவர் மக்களிடையே செல்வாக்கு மிக்கவராக இருந்தார். எனினும்,அந்நாட்டின் கடன் அதிகரித்து உள்ளது என எதிர்க்கட்சி தலைவர்கள் அவர் மீது குற்றம்சாட்டினர். பின்லாந்து நாடாளுமன்றத்துக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. இதில், பெட்டேரி ஆர்ப்போ தலைமையிலான மத்திய-வலது சாரி தேசிய கூட்டணி கட்சி(என்சிபி) வெற்றி பெற்றுள்ளது.

இதற்கு அடுத்து,வலது சாரி கட்சியான பின்ஸ் கட்சி அதிக வாக்குகளை கைப்பற்றி 2-வது இடம் பிடித்து உள்ளது.பிரதமர் சன்னா மரீனின் சோசலிஸ்ட் ஜனநாயக கட்சி 3-வது இடம் பிடித்து தோல்வி அடைந்து உள்ளது. இதையடுத்து பின்லாந்தின் புதிய பிரதமராக பெட்டேரி ஆர்ப்போ(53) அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலில் தோல்வியடைந்த சன்னா மரீன் ரஷ்யா-உக்ரைன் போரில் உக்ரைனுக்கு பெரிய வகையில் ஆதரவு அளித்தார்.

The post பின்லாந்து நாடாளுமன்ற தேர்தல்: பிரதமர் சன்னா மரீன் கட்சி தோல்வி appeared first on Dinakaran.

Tags : parliamentary election ,Sanna Marin ,Helsinki ,Finland ,Dinakaran ,
× RELATED இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் 65 சதவீதம்...