×

இனவெறி கருத்து கூறியதாக புகார்: நடிகை மீது எஸ்சி, எஸ்டி வழக்கு

சண்டிகர்: இனவெறி கருத்து கூறிய புகாரின் அடிப்படையில் அரியானா நடிகையின் மீது எஸ்சி/எஸ்டி பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. அரியானா மாநிலம் ஹன்சி நகரில் வசிக்கும் தலித் மனித உரிமைகளுக்கான தேசிய கூட்டணியின் தலைவர் ரஜத் கல்சன் கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை முன்முன் தத்தா மீது போலீசில் புகார் அளித்தார். அதில், நடிகை முன்முன் தத்தா வெளியிட்ட வீடியோ ஒன்றில், தனது அழகை ஒப்பிட்டு, பட்டியலின சாதியினருக்கு  எதிராக இனவெறி கருத்துகளை தெரிவித்துள்ளார். எனவே, அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார். போலீசில் புகார் அளிக்கப்பட்டதால், அதிர்ச்சியடைந்த நடிகை முன்முன் தத்தா, மற்றொரு வீடியோவை வெளியிட்டு மன்னிப்பு  கோரினார். அதில், ‘நான் தவறான வார்த்தையைப் பயன்படுத்தி இருந்தால் மன்னிக்கவும். மற்றவர்களின் மனதை காயப்படுத்தி இருந்தால், அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனது வார்த்தை தவறான அர்த்தத்தில் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது’ என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், ரஜன் கல்சன் கொடுத்த புகாரின் பேரில். நடிகை முன்முன் தத்தா மீது எஸ்சி/எஸ்டி பிரிவின் கீழ் ஹன்சி போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்….

The post இனவெறி கருத்து கூறியதாக புகார்: நடிகை மீது எஸ்சி, எஸ்டி வழக்கு appeared first on Dinakaran.

Tags : SC ,SD ,Chandigarh ,Ariana ,SC/ST ,Dinakaran ,
× RELATED திருப்பதியில் பேனருடன் நின்ற அதிமுக...