- தேர்தல் 2026
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தில்லி
- இந்திய தேர்தல் ஆணையம்
- கேரளா
- மேற்கு வங்கம்
- அசாம்
- புதுச்சேரி
டெல்லி: இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை இன்று மாலை 4 மணி அளவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது.
டெல்லியில் நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் இதற்கான அறிவிப்பு வெளியான உடனேயே, அந்தந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும். இதன் மூலம் புதிய திட்டங்களை அரசு அறிவிக்கவோ அல்லது வாக்காளர்களைக் கவரும் நடவடிக்கைகளில் ஈடுபடவோ முடியாது என்பதுடன், ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் தேர்தல் ஆணையத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் கொண்டுவரப்படும்.
மேற்கு வங்கத்தில் மட்டும் 3 முதல் 4 கட்டங்களாகத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக 2021-ல் 8 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாகவும், அசாமில் குறைந்த அளவிலான கட்டங்களிலும் தேர்தலை நடத்தி முடிக்க ஆணையம் ஆலோசித்து வருகிறது. மேற்கு வங்கத்தின் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
5 மாநிலங்களிலும் தேர்தல் திருவிழா களைகட்டியுள்ள நிலையில், இன்றைய அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
