×

மருத்துவமனையில் இருந்து போப்பாண்டவர் இன்று டிஸ்சார்ஜ்

ரோம்: சுவாச கோளாறால் பாதிக்கப்பட்டுள்ள போப்பாண்டவர் பிரான்சிஸ் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. அவர் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என வாடிகன் தெரிவித்துள்ளது. போப்பாண்டவர் பிரான்சிஸ்க்கு (86) மூச்சுக்குழாயில் ஏற்பட்ட தொற்று காரணமாக கடந்த புதன்கிழமை ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து வாடிகன் செய்தி தொடர்பாளர் மாட்டியோ புருனி கூறுகையில்,‘‘ போப்பாண்டவருக்கு சுவாசகுழாயில் தொற்று ஏற்பட்டுள்ளது. அதற்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு அவர் பீட்ஸா சாப்பிட்டார்’’ என்றார். இதற்கிடையே, வாடிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், போப்பாண்டவர் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரிவித்துள்ளது.

  • நலம் பெற மோடி வாழ்த்து பிரதமர் மோடி நேற்று டிவிட்டரில் பதிவிடுகையில், போப் விரைவாக குணமடையவும் நல்ல ஆரோக்கியத்தைப் பெறவும் பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டிருந்தார்.

The post மருத்துவமனையில் இருந்து போப்பாண்டவர் இன்று டிஸ்சார்ஜ் appeared first on Dinakaran.

Tags : Pope ,Rome ,Pope Francis' ,Dinakaran ,
× RELATED பாங்காக் அருகே ஓடும் ரயில் மீது கிரேன்...