×

பல அவதாரம் எடுக்கும் பெண் வேட்பாளர்கள்

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய தொகுதி குடியாத்தம் (தனி) தொகுதி. தற்போது  தனித்தொகுதியாக இருந்தாலும் 2001க்கு முன்பு வரை குடியாத்தம் பொது தொகுதியாக இருந்தது. இந்நிலையில் தற்போது நடைபெற உள்ள 2021 சட்டப்பேரவை தேர்தலில் குடியாத்தம் தொகுதியில் 15 பேர் போட்டியிடுகின்றனர். இதில் திமுக வேட்பாளராக அமலு, அதிமுக வேட்பாளராக பரிதா, அமமுக வேட்பாளராக  ஜெயந்தி பத்மநாபன், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக   கலையேந்திரி, ஐஜேகே வேட்பாளராக வெண்ணிலா ஆகிய 5 பேர் போட்டியிடுகின்றனர். சுயேச்சை வேட்பாளராக பிரியா, ராதா ஆகியோர் போட்டியிடுகின்றனர். தேர்தல் பிரசாரத்தில் வெயிலை பொருட்படுத்தாமல் தீவிர வாக்கு சேகரிப்பில் பெண் வேட்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் பிரசாரத்தில் பீடி சுருட்டுவது, டீக்கடைகளில் டீ ஆற்றுவது, தினசரி காய்கறி சந்தைகளில் காய்கறிகள் விற்பனை செய்வது, டீ கடைகளில் டீ, போண்டா, பஜ்ஜி போடுவது, ஆட்டோ ஓட்டுவது என்று தேர்தல் களத்தில் பல அவதாரங்கள் எடுத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கடந்த 2001ம் ஆண்டு அதிமுக சார்பில் சூரியகலா, 2006ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் லதா, 2016ம் ஆண்டு வழக்கறிஞர் ஜெயந்தி பத்மநாபன் ஆகியோர் பெண் எம்எல்ஏவாக குடியாத்தம் தொகுதியில் வெற்றி பெற்றார்கள் குறிப்பிடத்தக்கது. இப்படி குடியாத்தம் தொகுதி பெண்களுக்கான தொகுதியாகவே மாறிவிட்டது.

Tags : Many incarnate female candidates
× RELATED காவல் மற்றும் வருவாய்துறையில்...