×

உங்க ஓட்டே தேவையில்லை; பப்ளிக்கிடம் சீறிய முனுசாமி

சட்டப்பேரவை தேர்தல் நாள் நெருங்க, நெருங்க இலைகட்சி விஐபிகளோட சீற்றமும் அதிகமாகி இருக்காம். ஓட்டு கேட்கப்போற இடத்தில், பப்ளிக் ஏதாவது கேள்வி கேட்டா எரிஞ்சு விழுறாங்களாம். இப்படித்தான் அந்தகட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி, சாமியாட்டம் ஆடிய வீடியோ, அவர் ேபாட்டியிடும் வேப்பனஹள்ளி தொகுதி முழுவதும் வைரலாகி சர்ச்சையை கிளப்பியிருக்காம். தொகுதிக்கு உட்பட்ட  உத்தனப்பள்ளி கொம்மேப்பள்ளி ஊராட்சியில் திறந்த ஜீப்பில் சென்று கே.பி.முனுசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாரு. அந்த நேரத்தில் கொம்மேப்பள்ளி, உத்தனப்பள்ளி, பீர்ஜேப்பள்ளி, சானமாவு ஆகிய பகுதிகளுக்கு தேன்கனிக்கோட்டை பகுதியில் இருந்து யானைகள் அடிக்கடி வந்து செல்கின்றன. இந்த யானைகள் தாக்குதலால் பலர் படுகாயமடைகின்றனர். உயிர் பலிகளும் ஏற்படுகிறது. இதற்கு நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீங்க? என்று கூடியிருந்த பப்ளிக் கேட்டிருக்கு.

அதற்கு கே.பி.முனுசாமி அளித்த பதில் சரியாக, பப்ளிக் காதில் கேட்கலையாம். இதனால் ஜீப்பில் இருந்து கீழே இறங்கி வந்து எங்ககிட்ட பேசுங்கன்னு சிலர் சொன்னாங்களாம். இதில், ஆவேசத்தின் உச்சத்துக்கு ேபான முனுசாமி, `நான் 40 வருடமா அரசியல்லே இருக்கேன். பெரியபெரிய பதவியை எல்லாம் பாத்துட்டேன். அப்படிப்பட்ட எனக்கு இறங்கி வந்தால் தான்,  உங்கள் ஓட்டு கிடைக்கும் என்றால், உங்க ஓட்டே எனக்கு தேவையில்லை’’ என்று ஓபன் மைக்கில் கூறி விட்டு விர்ரென பறந்துட்டாராம். இந்த வீடியோ தான் இப்போது திரும்பிய பக்கமெல்லாம் போனில் வலம் வருதாம்.

Tags : Munusami , You do not need your vote; Little Munusami to the public
× RELATED வாஜ்பாய் இல்லாமல் மோடி பிரதமராகி...