சிவாஜி கணேசன், கே. பாலச்சந்தரை தொடர்ந்து நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு : முதல்வர் பழனிசாமி, கமல் வாழ்த்து!!

டெல்லி :திரைப்படத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுக்கு நடிகர் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இந்தியத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். ஏற்கெனவே பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்ம விபூஷன் விருதுகளைப் பெற்றுள்ள இவருக்கு திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. திரைப்படத்துறையில் சிறந்து விளங்குவோருக்கு கடந்த 1969-ம் ஆண்டு முதல் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக அறிவித்தார்.மேலும் தமிழக தேர்தலுக்கும் ரஜினிக்கு  தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

அமிதாபச்சன் ,வினோத் கண்ணா, லதா மங்கேஷ்கர் ,கன்னட நடிகர் ராஜ்குமார், கேரள இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் போன்றோருக்கு ஏற்கனவே தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் தாதா சாகேப் பால்கே விருது பெறும் 3வது கலைஞர் ரஜினி ஆவார். இதற்கு முன்பு நடிகர் ரஜினி, இயக்குனர் கே. பாலச்சந்தர் ஆகியோருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. 1996ம் ஆண்டு நடிகர் சிவாஜிக்கும் 2010ம் ஆண்டு கே பாலச்சந்தர் அவர்களுக்கும் இவ்விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் பழனிசாமி வாழ்த்து

 தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்திற்கு முதல்வர் பழனிசாமி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். தங்களது நடிப்பு திறமைக்கும், கடின உழைப்பிற்கும் கிடைத்த அங்கீகாரம் என ரஜினிக்கு முதல்வர் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் பல விருதுகளை ரஜினி பெற வேண்டும் என்றும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கமல் வாழ்த்து

அதே போல் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உச்ச நட்சத்திரமும் என் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது. திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம், எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>