×

ரயில் இருப்பு பாதை வழித்தடம் அமைக்கும் பணி; ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் செல்லும் வாகன போக்குவரத்தில் மாற்றம்

சென்னை: ரயில் இருப்பு பாதை வழித்தடம் அமைக்கும் பணி காரணமாக ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் செல்லும் வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-தெற்கு ரயில்வே துறை சார்பாக ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை பாலத்தில் 4-வது ரயில் இருப்பு பாதை வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற உள்ளதால் சுரங்கப்பாதையில் செல்லும் வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. இன்று (26.04.2024) இரவு 10 மணி முதல் முதல் 3 மாத காலத்திற்கு ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப்பாதையாக பின்வருமாறு செயல்பாட்டிற்கு வரும்.

ராயபுரம் பாலம் மற்றும் ராஜாஜி சாலையிலிருந்து காமராஜர் சாலையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் (போர் நினைவிடம் நோக்கி) அனுமதிக்கப்படாது. அதற்கு பதிலாக, அவை ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை அணுகு சாலை வடக்கு கோட்டை சாலை (NFS Road) → R.A Mandram → முத்துசாமி சாலை → Dr.முத்துசாமி பாலம் வாலாஜா பாயிண்ட் கொடி மர சாலை போர் நினைவுச்சின்னம் வழியாக காமராஜர் சாலையை அடையலாம்.காமராஜர் சாலையில் இருந்து பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக வழக்கம் போல் இயக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

The post ரயில் இருப்பு பாதை வழித்தடம் அமைக்கும் பணி; ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் செல்லும் வாகன போக்குவரத்தில் மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Reserve Bank subway ,Chennai ,Chennai Traffic Police ,Reserve Bank ,Southern Railway Department ,Dinakaran ,
× RELATED வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட...