×

84 நாட்களுக்கு பிறகே கோவிஷீல்டு தடுப்பூசியின் 2வது டோஸ் செலுத்த மத்திய அரசு அறிவுறுத்தல்

டெல்லி: கோவிஷீல்டு தடுப்பூசி 2வது டோஸ் செலுத்திக்கொள்ள 84 நாட்களுக்கு பிறகே ஆன்லைனில் தேதி ஒதுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் 2வது டோஸ் செலுத்திக்கொள்வதற்கான தேதியை மாற்றிக்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசிக்கான இடைவெளி காலம் 90 நாட்கள் என அதிகரிக்கப்பட்ட நிலையில் மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசிக்கான இடைவெளி காலம் 90 நாட்கள் என அதிகரிக்கப்பட்ட நிலையில் மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கக்கூடிய நேஷனல் கெல்த் மிஷன் அமைப்பின் சார்பாக அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த தலைமை செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கோவிஷீல்டு செலுத்துவதற்கான ஆன்லைன் முன்பதிவு மற்றும் நேரடியாக முன்பதிவு செய்தாலும் 84 நாட்களுக்கு பிறகு தான் 2வது டோஸ் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இதன்பின்னர் மாநில அரசின் அதிகாரிகள் தடுப்பூசி செலுத்தக்கூடிய அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு இந்த அறிவிப்பினை வழங்குவார்கள்.
ஏற்கனவே முதல் டோஸ் செலுத்திக்கொண்டு இரண்டாவது டோஸ் செலுத்துவதற்கான தேதி வந்தவர்களுக்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அவர்களுக்கு உரிய தகவலை எடுத்துரைத்து அவர்களுக்கான மாற்றி அமைக்கப்பட்ட தேதியினை தெரிவிக்கவும் தற்போது அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கால இடைவெளி அதிகரித்தால் தான் தடுப்பூசியின் வீரியம் அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கால இடைவெளி என்பது கோவிஷீல்டு தடுப்பூசிக்கானது மட்டும் தான் என்பதையம் கருத்தில் கொள்ள வேண்டும்….

The post 84 நாட்களுக்கு பிறகே கோவிஷீல்டு தடுப்பூசியின் 2வது டோஸ் செலுத்த மத்திய அரசு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Central Govt ,Delhi ,central government ,Dinakaran ,
× RELATED வெறுப்பு பிரசாரம் பிரதமர் மோடி மீது...