×

கொரோனா நிவாரண நிதிக்கு ஒருநாள் ஊதியம் வழங்க முடிவு: தமிழ்நாடு பொதுப்பணித்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கம் முதல்வருக்கு கடிதம்

சென்னை: முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, ஒருநாள் ஊதியத்தை வழங்க தமிழ்நாடு பொதுப்பணித்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பொதுப்பணித்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் ராமமூர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பினை மக்களுக்கு பரவாமல் தடுக்கும் பொருட்டு தமிழக அரசு பலகட்ட முயற்சிகளை மேற்கொண்டு சுகாதார பணிகளை செய்து வருவதற்கு பொதுப்பணித்துறை ஊர்தி ஓட்டுனர்கள் சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அரசின் உயர்வான சேவையில் பங்குபெறும் நோக்கில் எங்கள் பொதுப்பணித்துறை ஊர்தி ஓட்டுனர்கள் சங்கத்தின் சார்பில் ஒருநாள் ஊதியத்தினை அரசுக்கு ஒப்படைப்பு செய்வதென மாநில நிர்வாக குழுவால் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே, பொதுப்பணித்துறை ஊர்தி ஓட்டுனர்களின் ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்து கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது….

The post கொரோனா நிவாரண நிதிக்கு ஒருநாள் ஊதியம் வழங்க முடிவு: தமிழ்நாடு பொதுப்பணித்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கம் முதல்வருக்கு கடிதம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Public Works Vorthi Drivers Association ,Chennai ,Tamil Nadu Public Department Vorthi Drivers Association ,Dinakaran ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...