×

தொல்லியல் சின்னம் பாதுகாக்க 2 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை: 2020-21ம் ஆண்டு முதல் தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க 2 கோடி நிதி உயர்த்தி அரசு ஆணையிட்டுள்ளது. தொல்லியல் துறையில் 94 புராதன மற்றும் வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகின்றன.   பாதுகாக்கப்பட்ட சின்னங்களில் புனரமைப்பு, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 1 கோடி நிதியினைக் கொண்டு  தேவைக்கேற்ப பராமரிப்புப் பணி மேற்கொள்ள  இயலாத நிலை உள்ளது. எனவே, தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்களை தொல்லியல் நெறிமுறைகளின்படி சிறப்பான முறையில் பாதுகாப்பதற்கும், அதன் வரலாற்றுச் சிறப்பினை எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்வதற்கும், அப்பணியின் சிறப்புத் தன்மையை கருத்தில் கொண்டும், வரவு-செலவு திட்டத்தில் தொடரும் செலவினமாக ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 1 கோடியினை 2020-21 ம் நிதி ஆண்டு முதல் 2 கோடியாக   உயர்த்தி அரசு  ஆணையிட்டுள்ளது.


Tags : 2 crore to protect archeological monument
× RELATED தமிழ்நாடு முதல்வர் தாயுமானவர்...