×

காளை விடும் திருவிழாவில் சீறிப்பாய்ந்த காளைகள் திரளானோர் கண்டுகளித்தனர் கண்ணமங்கலம் அருகே காட்டுக்காநல்லூரில்

கண்ணமங்கலம்: கண்ணமங்கலம் அருகே காட்டுக்காநல்லூரில் காளைவிடும் திருவிழாவில் காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின. இதனை திரளான ரசிகர்கள் கண்டுகளித்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த காட்டுக்காநல்லூர் கிராமத்தில் 5ம் ஆண்டு காளை விடும் திருவிழா அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி காலை கிராம தேவதை பொன்னியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். இதனை தொடர்ந்து பேண்டு வாத்தியங்கள், வாணவேடிக்கை முழங்க விழாக்குழுவினர் பரிசுப்பொருட்களுடன் ஊர்வலமாக வாடிவாசலை வந்தடைந்தனர். பின்னர் வீதியில் காளைகள் விடப்பட்டன. முடிவில் குறிப்பிட்ட தூரத்தை குறைந்த நேரத்தில் ஓடிய காளைகளுக்கு முதல் பரிசு ரூ.71001, 2ம் பரிசு ரூ.60ஆயிரம், 3ம் பரிசு ரூ.50ஆயிரம், 4ம் பரிசு ரூ.40ஆயிரம், 5ம் பரிசு ரூ.30ஆயிரம் உள்ளிட்ட 71 பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து நூற்றுக்கணக்கான காளைகளும், ஆயிரக்கணக்கான பார்வையாளர்களும் கலந்து கொண்டனர். காட்டுக்காநல்லூரில் பார்வையாளர்கள் மத்தியில் சீறிப்பாய்ந்த காளை. …

The post காளை விடும் திருவிழாவில் சீறிப்பாய்ந்த காளைகள் திரளானோர் கண்டுகளித்தனர் கண்ணமங்கலம் அருகே காட்டுக்காநல்லூரில் appeared first on Dinakaran.

Tags : Kattukanallur ,Kannamangalam ,Tiruvannamalai district ,Dinakaran ,
× RELATED மாணவியிடம் பாலியல் சில்மிஷம் விவசாயி மீது போக்சோ வழக்கு ஆரணி அருகே