×

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து 'காவிரி காப்பாளன்'எனும் பட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி பொருத்தமானவரானார் : ஆளுநர் புகழாரம்!!

சென்னை: இரண்டு மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை இன்று காலை 11 மணிக்கு கூடியது. முதல் நாள் கூட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அவர் உரை நிகழ்த்தியது பின்வருமாறு..

*கொரோனா சூழலில் மிகவும் இக்கட்டான காலத்தில் தமிழக சட்டப்பேரவை கூடியுள்ளது

*நாட்டிலேயே அதிகம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டது தமிழகம் தான். தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது

*மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளதால் சமூகநீதியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

*தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடர்ந்து நீடிக்கும்

*7.5 சதவீத உள்ஒதுக்கீட்டால் நடப்பு ஆண்டில் அரசுப் பள்ளி மாணவர்கள் 435பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்

*தமிழகத்தில் 2000 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்குவது தொலைநோக்கு பார்வையுடனான திட்டம்

*தமிழகத்தில் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி எனும் முதலமைச்சரின் அறிவிப்பு பாராட்டுக்குரியது.

*முதலமைச்சரின் உதவி மையம் எனும் ஒருங்கிணைக்கப்பட்ட குறை தீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படும்

*தங்கள் வீடுகளில் இருந்தே 1100 என்ற எண்ணிற்கு அழைத்து அரசின் சேவைகளை பெறலாம். அரசின் சேவைகளை பெற தொலைபேசி எண் 1100

*கொரோனா நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளுக்கு இதுவரை ரூ.13208 கோடி செலவிடப்பட்டுள்ளது.

*கொரோனா காலகட்டத்திலும் ரூ.60,674 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது.

*காவிரியின் குறுக்கே கர்நாடக எவ்வித அணைகளையும் கட்டக்கூடாது என்று மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம்

*உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி பெரியாறு சூடறடிறடன குறுக்கே கேரளா அணை கட்டுவதை அனுமதிக்க கூடாது

*காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தின் முதல் கட்டமாக காவிரி - தெற்கு வெள்ளாறு இணைப்பு முதல்கட்டமாக துவங்கப்படும்

*அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் முதற்கட்ட பணிகள் மார்ச் மாதத்திற்கு முன்னர் நிறைவுபெறும்

*காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து காவிரி காப்பாளன் எனும் பட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி பொருத்தமானவர் ஆகிறார்.

*பயிர் காப்பீடு திட்டத்திற்கான கூடுதல் செலவை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது

*தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடிக்கும் பகுதிகளில் அவர்களின் உரிமையை தமிழக அரசு உறுதி செய்யும்

*தமிழக மக்கள் இந்தியாவன் எந்த பகுதியிலும் ரேசன் கடைகளில் பொருட்களை பெற ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் உதவும்

முன்னதாக எனது உரைக்கு எதிர்ப்பு தெரிவிக்க விரும்பினால் திமுகவினர் 5 நிமிடம் வெளிநடப்பு செய்துவிட்டு அவைக்கு திரும்பலாம் என ஆளுநரே ஆலோசனை கூறியதால் எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளதாக தெரிகிறது.

Tags : Palanisamy ,Governor ,Cauvery Delta ,zone , Governor, Banwarilal Purohit, Text
× RELATED செம்பனார்கோயில் பகுதியில் மண்வளத்தை மேம்படுத்த வயலில் ஆட்டுக்கிடை