×

தெலுங்கானா முன்னாள் முதல்வரும் பிஆர்எஸ் தலைவருமான சந்திரசேகர் ராவ் 2 நாட்கள் பிரச்சாரம் செய்ய தடை

ஹைதராபாத்: தெலுங்கானா முன்னாள் முதல்வரும் பிஆர்எஸ் தலைவருமான சந்திரசேகர் ராவ் 2 நாட்கள் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 8 மணி முதல் 48 மணி நேரத்துக்கு பிரச்சாரம் செய்யக் கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதித்தது. காங்கிரஸ் கட்சி மற்றும் தலைவர்கள் குறித்து அவதூறாக பேசியதால் கே.சி.ஆர். பிரச்சாரம் செய்ய தடை விதித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரங்களில் காங்கிரஸ் கட்சி குறித்து இழிவான வகையில் சந்திரசேகர ராவ் கருத்து தெரிவித்ததாக தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ஜி நிரஞ்சன் சில நாட்களுக்கு முன்னர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் சந்திரசேகர ராவ் பிரச்சாரம் செய்ய தடை விதித்து தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

“தேர்தல் நடத்தை விதிகளை மீறி, ஏப்ரல் 5, 2024 அன்று சிர்சில்லாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது சந்திரசேகர ராவ் வெளியிட்ட அவதூறான கருத்துக்களை வன்மையாகக் கண்டிப்பதோடு, அவரின் தவறான நடத்தைக்காக சந்திரசேகர் ராவை பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்படுகிறது.” என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

The post தெலுங்கானா முன்னாள் முதல்வரும் பிஆர்எஸ் தலைவருமான சந்திரசேகர் ராவ் 2 நாட்கள் பிரச்சாரம் செய்ய தடை appeared first on Dinakaran.

Tags : Telangana ,PRS ,Chandrashekar Rao ,Hyderabad ,Election Commission ,Dinakaran ,
× RELATED தெலுங்கானா முன்னாள் முதல்வரும்...