×

ஜெயலலிதா நினைவகமாக மாற்றப்பட்ட போயஸ் கார்டன் இல்லத்தின் சாவியை அரசே வைத்துக்கொள்ளலாம்: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: ஜெயலலிதா நினைவகமாக மாற்றப்பட்ட போயஸ் கார்டன் இல்லத்தின் சாவியை அரசே வைத்துக்கொள்ளலாம் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவால் பொதுமக்கள் ஜெயலலிதா வீட்டை பார்வைவிட அனுமதிக்கப்படவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி காலமானார். இதையடுத்து அவர் வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் விருப்பம் தெரிவித்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, ஜெயலலிதா வாழ்ந்த `வேதா இல்லம்’ அரசுடைமையாக்கப்பட்டு நினைவிடமாக மாற்றப்படும் என்று கடந்த 2017 ஆகஸ்ட் 17ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்கு ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக், மகள் தீபா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எனினும் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை, அரசின் நினைவிடமாக மாற்றும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம்’ 10 கிரவுண்ட் 322 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. முன்பகுதியில் எழில்மிகு  தோட்டத்துடன் கூடிய இல்லத்தை ஜெயலலிதா வாழ்ந்த காலத்தில் இருந்ததை போல பழமை மாறாமல் தமிழக அரசால் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. அதன்படி ஜெயலலிதா வாழ்ந்த அறை, நூலகம், அலுவலக அறை, விருந்தினர் காத்திருப்பு அறை, விருந்தினர் சந்திப்பு அறை, கூட்ட அரங்கு ஆகிய இடங்களில் பூச்சு வேலைப்பாடுகள், தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

தற்போது அந்த பணிகள் முடிவடைந்துள்ளது. அரசுடையாக்கப்பட்டுள்ள வேதா இல்லத்தை 28ம் தேதி (நேற்று) முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைப்பார் என்றும், அன்று முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படும் என்றும் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த நிலையில், போயஸ்கார்டன் இல்லத்தை அரசு கையகப்படுத்திய உத்தரவை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கும், இழப்பீடு வழங்கிய உத்தரவை எதிர்த்து தீபாவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அரசு நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ள ஜெயலலிதா இல்லத்தை திறந்து வைக்கலாம்.

ஆனால், ஜெலலிதா வீட்டை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்க கூடாது. நினைவில்லமாக மாற்றும் விழாவில் 100 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும், வீட்டுக்குள் செல்ல அனுமதி இல்லை என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுபாடுகளை உயர் நீதிமன்றம் விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் மேல் முறையீடு செய்யப்பது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது; அரசின் வாதத்தை பதிவு செய்த நீதிபதிகள் சாவி ஒப்படைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதித்ததுடன், வழக்கு குறித்து தீபா, தீபக் ஆகியோர் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அளித்து வழக்கு விசாரணை பிப் -ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Tags : government ,house ,Boise Garden ,memorial ,Chennai High Court ,Jayalalithaa , The government can keep the keys of the Boise Garden house which was converted into a memorial for Jayalalithaa: Chennai High Court
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்