கன்னியாஸ்திரி அபயா கொலையில் ஆயுள் தண்டனை பெற்ற பாதிரியார் ஐகோர்ட்டில் அப்பீல்

திருவனந்தபுரம்:கேரள கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில் தண்டனை ெபற்ற பாதிரியார் தாமஸ் கோட்டூர் உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளார்.கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் கன்னியாஸ்திரி அபயா. கடந்த 1992ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய 3வது சிபிஐ குழு பாதிரியார்கள் தாமஸ் கோட்டூர், ஜோஸ் புத்ருக்கயில், கன்னியாஸ்திரி செபி ஆகியோரை 2008 நவம்பரில் கைது செய்தது.

இதையடுத்து திருவனந்தபுரம் சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இதற்கிடையே ஜோஸ் புத்ருக்கயில் உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். பாதிரியார் தாமஸ் கோட்டூர் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகியோர் வழக்கை சந்தித்து வந்தனர். இந்த வழக்கில் கடந்த டிசம்பர் 23ம் தேதி தண்டனை வழங்கப்பட்டது. இதில் பாதிரியார் தாமஸ் கோட்டூருக்கு இரட்டை ஆயுள் தண்டனை, கூடுதலாக 8 ஆண்டுகள் சிறையும், கன்னியாஸ்திரி செபிக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. 2 பேருக்கும் தலா ₹5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த கொலை வழக்கில் 28 ஆண்டுகளுக்கு பிறகு தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தண்டனையை எதிர்த்து பாதிரியார் தாமஸ் கோட்டூர் உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளார்.

Related Stories: