×

குஜராத் முன்னாள் முதல்வர் சோலங்கி மறைவு

அகமதாபாத்: குஜராத்தின் முன்னாள் முதல்வரான மாதவ் சிங் சோலங்கி  உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 93. காங்கிரஸ் மூத்த தலைவரும், குஜராத்தின் முன்னாள் முதல்வருமான மாதவ் சிங் ேசாலங்கி, முதுமை காரணமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், நேற்று காலையில் காந்தி நகரில் உள்ள தனது வீட்டில் அவர் உயிரிழந்தார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்பு, குஜராத்தில் நீண்ட காலம் முதல்வராக பணியாற்றியவர் என்ற பெருமையைப் பெற்றவர் சோலங்கி. இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராகவும், 1991-1992 காலகட்டத்தில் மத்திய வெளியுறவு  அமைச்சராகவும் பணியாற்றி இருக்கிறார். அவருடைய மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags : Solanki ,Gujarat , Former Gujarat Chief Minister Solanki passes away
× RELATED அடகு கடையில் போலி நகை தந்து ரூ.2.95 லட்சம் மோசடி