×

சின்னமனூர் அருகே மலைச்சாலைகளை மறைக்கும் குளிர்மேக கூட்டங்கள்: வாகன ஓட்டிகள் அவதி

சின்னமனூர்: சின்னமனூர் அருகே 7 மலைக் கிராமங்களைக் கொண்ட ஹைவேவிஸ் பேருராட்சி உள்ளது. இங்கு தென் பழனி மலையடிவாரத்திலிருந்து 18 கொண்டை ஊசி வளைவுகளுடன்  மலைச்சாலை செல்கிறது. ஹைவேவிஸ், தூவானம், மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு என ஐந்து அணைகளும், ஏரிகளும் உள்ளன. இங்குள்ள மேகமலையில் தேயிலை, ஏலம், மிளகு, காபி போன்ற பயிர்கள் விவசாயம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதால் வனவிலங்குகளும் ஏராளமாக இங்கு வசித்த வருகின்றன. மேகமலை வன உயரின சரணாலமாக இருப்பதால் சின்னமனூர் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

தமிழக, கேரளா மலைகளின் வரிசையில் இருப்பதால் வரு டத்தில் 8 மாதம் இங்கு மழை தவறாமல் பெய்கிறது. கார்த்திகை, மார்கழி, தை, மாசி வரை இப்பகுதியில் கடும் குளிர் நிலவும். தற்போது நிலவும் பனியால் 7 மலைக்கிராமங்கள் உட்பட மலைச் சாலைகளையும் மறைத்து  விடுகிறது. இதனால் அனைத்து அனைத்து வாகனங்களும் பகலிலும்  முகப்பு விளக்கிட்டு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. மேகக்கூட்டங்கள் சாலைகளை மறைப்பதால் எதிரே வாகனம் வந்தாலும், யானை, சிறுத்தை, புலி வந்தாலும் சிக்கல் என்பதால் இவ்வழியே வாகனங்களில் செல்பவர்கள் அச்சத்துடன் தற்போது சென்று வருகின்றனர்.

Tags : mountain roads ,Chinnamanur ,Motorists , Cold clouds covering mountain roads near Chinnamanur: Motorists suffer
× RELATED வாகனம் மோதி எலட்ரீசியன் பலி