×

தென் கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

சென்னை: அடுத்த 24 மணி நேரத்திற்கு வட கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் , தென் கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 
நாளை தஞ்சாவூர்,திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர் மாவட்டங்கள்  மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழையும் ஏனைய கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

06.01.2021 அன்று தஞ்சாவூர்,திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், தேனி, நீலகிரி, கோயம்புத்தூர், மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழையும் ஏனைய கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என கூறியுள்ளது. 07.01.2021 மற்றும் 08.01.2021  தினத்தன்று தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மலை பெய்யக்கூடும்  சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபாட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியாசை ஒற்றியூம் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Tags : districts ,Meteorological Department , Moderate rains are also expected in the southern coastal districts, the Meteorological Department said
× RELATED தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களில் அடுத்த 3...