×

ரயுகு குறுங்கோளில் இருந்து கொண்டுவரப்பட்ட மண் மாதிரி எதிர்பார்த்ததை விட அதிகம் :ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி

ரயுகு குறுங்கோளில் இருந்து ஹயாபூசா-2 விண்கலம் சேகரித்து அனுப்பிய மண் தாங்கள் எதிர்பார்த்ததை விடவும் அதிகம் என்பதால், ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பூமியில் இருந்து 30 கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள இந்த குறுங்கோளுக்கு 6 வருட பயணம் செய்த ஹயாபூசா-2 விண்கலம், மண் மாதிரிகள் அடங்கிய சிறு பெட்டகத்தை பூமிக்கு அனுப்பியது. ஆஸ்திரேலிய பாலைவனத்தில் இருந்து இந்த பெட்டகம் ஜப்பானின் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு திறக்கப்பட்டது. அதிலுள்ள மண் காப்பிகொட்டையை அரைத்தது போல உள்ளது.அதில் உள்ள கனிமங்களில் இருந்து வெளியாகும் வாயுவையும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.


Tags : researchers ,Ryuku , Rayuku Asteroid, Soil Model, Researchers, Happiness
× RELATED லண்டனில் ஆழ்கடலில்...