அனகோண்டா போல வளைந்து காணப்படும் மருதூர் அணைக்கட்டு சுற்றுலா தலமாக அறிவிக்கப்படுமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு

செய்துங்கநல்லூர்: மருதூர் அணைக்கட்டில் சீறிபாயும் தண்ணீர் காண்பதற்கு கண்ணை கவருவதாக உள்ளது. இந்த இடத்தினை சுற்றுலா தலமாக அறிவித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தாமிரபரணி ஆற்றில் 7 வது அணைகட்டு மருதூர் அணைக்கட்டு. தாமிரபரணியிலே மிக நீளமான தடுப்பணை இது. இந்த அணைக்கட்டு 4096 அடி நீளம் கொண்டது. அனகோண்டா பாம்புபோல வளைந்து காணப்படும் இந்த அணையில் மருதூர் மேலக்கால், கீழக்கால் மூலமாக சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

அணைக் கட்டில் உள்ள முள்செடிகளை கடந்த ஆண்டு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஏற்பாட்டின்பேரில் பொதுமக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் சீரமைக்கப்பட்டது. இங்கு மிகவும் பழமையான மருதவல்லி சோழவல்லி கோயில் உள்ளது. மழைக்காலங்களில் இங்குள்ள மறுகாலில் தண்ணீர் விழுவது கண்கொள்ளா காட்சியாகும். எனவே இவ்விடத்தை சுற்றுலா தலமாக அறிவித்து இங்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: