×

பெட்ரோல் பங்க்குகள் மோடி வசூல் கேந்திரா: காங். விமர்சனம்

புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. ராக்கெட் வேகத்தில் எரிபொருள் விலை உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள், சமானிய மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து மாநிலங்களவை எம்பி, பாஜ மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி, அதிகபட்சமாக பெட்ரோல் லிட்டருக்கு ரூ40 என்ற விலையில் விற்கப்பட வேண்டும். அதற்கு மேல் விற்பனை செய்வது மிகப்பெரிய சுரண்டலாகும் என மத்திய அரசை விமர்சித்து இருந்தார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவரான ஸ்ரீவத்சவா பெட்ரோல் விலை உயர்வு குறித்து மத்திய அரசை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார். ஸ்ரீவத்சவா தனது டிவிட்டர் பதிவில், ‘பெட்ரோல் விலை ரூ.90, உண்மையான விலை ரூ.30. மோடியின் வரி ரூ.60. நாட்டில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க்குகளின் பெயரையும் “நரேந்திரமோடி வசூல் கேந்திரா” என மாற்ற வேண்டும்,’ என குறிப்பிட்டுள்ளார்.

Tags : Petrol Stocks Modi Collection Kendra: Cong. Review
× RELATED தொகுதிப் பணிகளை மேற்கொள்ளவே அமித் ஷா...