×

பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள், வெடிப்பொருட்களை எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் பறிமுதல்!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள், வெடிப்பொருட்களை எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் உள்ள குப்வாரா பகுதியில் வெடிப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து எல்லை பாதுபாப்பு படையினர், ராணுவத்தினர் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் இணைந்து தீவிர வேட்டையில் ஈடுப்பட்டு, சபீர் அகமது என்ற நபரை கைது செய்துள்ளார்.

இதையடுத்து சபீர் அகமதிடம் இருந்து ஒரு துப்பாக்கி, 10 ரவுண்டு துப்பாக்கி குண்டுகள், 4 கையெறி குண்டுகள், 2 ஐ.இ.டி.(IED) வெடிகுண்டுகளை அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த வெடிப்பொருட்களை கொண்டு ஸ்ரீநகரில் நடைபெற உள்ள அமர்நாத் யாத்திரையில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தேடுதல் வேட்டையின் மூலம் பயங்கரவாதிகளின் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சபீர் அகமதுயிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள், வெடிப்பொருட்களை எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் பறிமுதல்! appeared first on Dinakaran.

Tags :
× RELATED அமலாக்கத்துறையை கண்டித்து கர்நாடக...