×

100 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவான 2 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு!!

சூரிய மண்டலத்திற்கு வெளியே கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தோன்றிய 2 புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என்று அமீரக வானியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சூரிய மண்டலத்திற்கு வெளியே ஜி டைப் வகையிலான நட்சத்திரத்தை சுற்றி ‘ஹெச்.டி 63433பி’ மற்றும் ‘ஹெச்.டி 63433சி’ என்ற புதிய 2 கிரகங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கிரகங்கள் சூரிய குடும்பத்திற்கு வெளியே பல 100 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றி இருப்பது தெரிய வந்துள்ளது.இதன் ஆராய்ச்சிக்காக நாசா கடந்த 2018-ம் ஆண்டில் விண்ணில் செலுத்திய டிஇஎஸ்எஸ் என்ற வெளிகிரகங்களை ஆய்வு செய்யும் செயற்கைகோள் பயன்படுத்தப்பட்டது.


Tags : planets , Planets, Discovery
× RELATED ஜோதிட ரகசியங்கள்