×

இங்கி.யில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது 90 வயது மூதாட்டிக்கு முதல் கொரோனா தடுப்பூசி

லண்டன்: உலகிலேயே முதல் முறையாக இங்கிலாந்தில் நேற்று முதல் கொரோனா தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. முதன் முதலில் 90 வயது மூதாட்டி மார்கரெட் என்பவர் இந்த ஊசியை போட்டுக்கொண்டார். அமெரிக்காவின்  பைசர் நிறுவனம் மற்றும் ஜெர்மனியின் பயோன்டெக் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கின. இந்த  தடுப்பூசிக்கு இங்கிலாந்தில் அவசர கால பயன்பாட்டுக்கான அனுமதி கடந்த வாரம் வழங்கப்பட்டது.  அரசின் அனுமதியை அடுத்து  நேற்று பிபைசர் கொரோனா தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. முதன் முதலாக, பைசர் தடுப்பூசி 90வயது மூதாட்டியான மார்கிரெட் கெனென் என்பவருக்கு போடப்பட்டது. கவன்டிரியில் உள்ள உள்ளூர் மருத்துவமனையில்  செவிலியர் மே பார்சன் மார்கிரெட்டுக்கு பைசர் தடுப்பூசியை செலுத்தினார். 21 நாட்களுக்கு பின் அவருக்கு இரண்டாவது தடுப்பூசி போடப்படும்.  மார்கிரெட் அடுத்த வாரம் தனது 91வது பிறந்த நாளை கொண்டா இருக்கிறார். 90 வயதை கடந்த  இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்கும் விரைவில் தடுப்பூசி போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Tags : The first corona vaccine for a 90-year-old woman came into use in Ing
× RELATED மியான்மரின் மூத்த அரசியல் தலைவர் டின் ஓ காலமானார்