×

மியான்மரின் மூத்த அரசியல் தலைவர் டின் ஓ காலமானார்

பாங்காக்: மியான்மரின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக்கின் இணை நிறுவனர் டின் ஓ பலவீனம் உள்ளிட்ட உடல் நலப் பிரச்னைகள் காரணமாக கடந்த 29ம் தேதி யாங்கோன் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் காலமானார். அவருக்கு வயது 97. முன்னாள் ராணுவ தளபதியான டின் ஓ, ராணுவ ஆட்சிக்கு எதிரான புரட்சி தோல்வி அடைந்த பிறகு, 1988ல் ஆங் சான் சூகியுடன் இணைந்து மியான்மரின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியை தொடங்கினார். கட்சியின் துணைத்தலைவராக இருந்தார். ஆங் சாங் சூகி போலவே டின் ஓவும் 2010 பொதுத் தேர்தலுக்கு முன்பாக விடுவிக்கப்படுவதற்கு முன், 21 ஆண்டுகளில் 14 ஆண்டுகள் சிறையிலும், வீட்டு சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தார். 2020ல் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டதும், ஆங் சாங் சூயை போல டின் ஓ கைது செய்யப்படவில்லை. யாங்கூனில் உள்ள அவரது வீட்டில் வசித்து வந்தார்.

The post மியான்மரின் மூத்த அரசியல் தலைவர் டின் ஓ காலமானார் appeared first on Dinakaran.

Tags : Myanmar ,Din O ,Bangkok ,National League for Democracy of Myanmar ,Din Oh ,Yangon General Hospital ,Dinakaran ,
× RELATED கம்போடியாவில் ஐ.டி. வேலை வாங்கித்...