×

ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என்று தீர்ப்பு

நியூயார்க்: அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்புடன் உறவு வைத்திருந்ததாக ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் குற்றம்சாட்டியிருந்தார். கடந்த 2016ம் ஆண்டு அதிபர் தேர்தலில்போது இந்த விவகாரத்தை எழுப்பாமல் இருப்பதற்காக நடிகை ஸ்டார்மிக்கு டிரம்ப் பணம் கொடுத்துள்ளார். இந்த பணத்தை டிரம்ப் தேர்தல் நிதியில் இருந்து கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கு மேன்ஹாட்டன் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

6 வாரங்கள் நடந்த விசாரணையில் பாலியல் குற்றச்சாட்டை எழுப்பிய நடிகை ஸ்டார்மி உட்பட 22 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. 12 நீதிபதிகள் அடங்கிய அமர்வானது, முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என்று தீர்ப்பு கூறியது. தீர்ப்பின் விவரங்கள் ஜூலை 11ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. அமெரிக்க வரலாற்றில் முன்னாள் அதிபர் ஒருவர் குற்றவாளி என்று தீர்ப்பு கூறப்படுவது இதுவே முதல் முறையாகும். எனினும் இந்த தீர்ப்பு டிரம்ப் தேர்தலில் போட்டியிடுவதை பாதிக்காது என்று கூறப்படுகின்றது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்யக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

 

The post ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என்று தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Donald Trump ,New York ,Stormy Daniels ,US ,President Donald Trump ,Trump ,Stormi ,2016 presidential election ,Dinakaran ,
× RELATED மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு...