×

காட்டு யானைகள் தாக்கி குடியிருப்புகள் சேதம்

பந்தலூர்: பந்தலூர் அருகே தேவாலா அரசு தேயிலைத்தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்புகளை காட்டு யானைகள் உடைத்து சேதம் செய்தது. பந்தலூர் அருகே தேவாலா அரசு தேயிலைத்தோட்டம் (டேன் டீ) சரகம் 5ஏ பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு 2 காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து டேன் டீ தொழிலாளி யோகேஷ்வரி என்பவரது வீட்டின் முன்புற கதவு மற்றும் சுவரினை உடைத்து சேதம் செய்தது. வீட்டில்  இருந்த  குழந்தைகள் கூச்சலிட்டதில் யானைகள் அங்கிருந்து நகர்ந்து ஜெயக்கொடி மற்றும் முருகையா ஆகியோரின் வீட்டின் கதவுகளை உடைத்து சேதம் செய்துள்ளது.

பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை நேற்று கூடலூர் எம்.எல்.ஏ. திராவிடமணி நேரில் சென்று ஆறுதல் கூறி உதவினார். மேலும் சம்பவம் குறித்து வனத்துறையினர் மற்றும் டேன்டீ தேயிலைத்தோட்டம் அதிகாரிகளை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.  தொழிலாளர்கள் கூறுகையில் ‘‘இப்பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம்  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வனத்துறையினர் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும். மேலும் இப்பகுதியில் தெருவிளக்குகள் இல்லாததால்  யானை நடமாட்டம் குறித்து தெரிந்து கொள்ளமுடியாமல் உள்ளது.

மேலும் குடியிருப்புகளுக்கு அருகே கழிப்பறைகள் இருப்பதால் இரவு நேரங்களில் மக்கள் இயற்கை உபாதைகள் கழிப்பதற்கு வெளியே செல்லும்போது வனவிலங்குகள் மனித மோதல் ஏற்படுகின்றது. சில குடியிருப்புகளுக்கு கழிப்பறை வசதி இல்லாததால் மக்களுக்கு மேலும் பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்தார்.

Tags : elephants attack ,apartments , Wild elephants
× RELATED உரிய ஆவணமில்லாத ரூ.68 ஆயிரம் பறிமுதல்