×

தீபாவளியை முன்னிட்டு பஸ் நிலையங்களுக்கு செல்ல 310 இணைப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படும்: எம்டிசி நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு செல்ல வசதியாக இன்று முதல் மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 310 சிறப்பு இணைப்பு பேருந்துகள் 24 மணிநேரமும் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகர் போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மொத்தம் 14,757 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் அனைத்தும் தீபாவளியின் போது கூட்ட நெரிசலை குறைத்திடும் வகையில் மாதவரம் புறநகர் பேருந்து நிலையம், தாம்பரம் புதிய பேருந்து நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், கே.கே.நகர் பேருந்து நிலையம் ஆகிய 5 இடங்களில் இருந்து இயக்கப்படுகிறது.

இந்த 5 பேருந்து நிலையங்களுக்கும் பொதுமக்கள் எளிதாக சென்றிட ஏதுவாக, எம்டிசி சார்பில் கூடுதலாக 310 சிறப்பு பேருந்துகள் இன்று (11.11.20) முதல் 13ம் தேதி வரை 3 நாட்களுக்கு 24 மணி நேரமும் இயக்கப்படுகின்றன. அவை முறையே கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிற்கு திருவொற்றியூரில் இருந்து 6 பஸ்கள், மணலி-2, மாதவரம்-6, பிராட்வே-4, அண்ணா சதுக்கம்-4, எம்கேபி நகர்-5, தி.நகர்-2, ஆவடி-2, திருவான்மியூர்-18, ஆவடி-6, திருவிக.நகர்-6, கேளம்பாக்கம்-10, எண்ணூர்-3, குன்றத்தூர்-1, கண்ணகி நகர்-1, வள்ளலார் நகர்-2, பூந்தமல்லி-19, பெருங்களத்தூர்-19 என மொத்தம் 116 பஸ்கள் இயக்கப்படுகிறது.

இதேபோல் தாம்பரம் புதிய பஸ் ஸ்டாண்ட் மற்றும் ரயில்நிலைய பஸ் ஸ்டாண்டிற்கு பிராட்வேயில் இருந்து 12, பிராட்வே (கூடுவாஞ்சேரி வழி)-9, திருவான்மியூர்-9, திருவான்மியூர் (புதிய பேருந்து நிலைய வழி)-10, அடையாறு-12, வேளச்சேரி-10, கோவளம்-12, பிராட்வே (தாம்பரம் வழி)-8, செங்கல்பட்டு-10, ஸ்ரீபெரும்புதூர்-5, திருப்போரூர்-7, தி.நகர்-5, சோழிங்கநல்லூர்-2, மாமல்லபுரம்-2, தி.நகர் (தாம்பரம் புதிய பேருந்து நிலைய வழி)-1, தி.நகர் (கூடுவாஞ்சேரி வழி)-2 என மொத்தம் 114 பஸ்கள் இயக்கப்படுகிறது.

பூந்தமல்லி பேருந்து நிலையத்திற்கு செங்குன்றம்-12, அம்பத்தூர் எஸ்டேட்-7, தாம்பரம்-11, தி.நகர்-7, பிராட்வே-6, திருவொற்றியூர்-12, மந்தவெளி-2 என மொத்தம் 57 பஸ்கள் இயக்கப்படுகிறது. மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்திற்கு எம்எம்பிடி-3, செங்குன்றம்-3, தாம்பரம்-4, கவியரசு கண்ணதாசன் நகர்-4, திருவொற்றியூர்-2 என மொத்தம் 16 பஸ்கள் இயக்கப்படுகிறது. கே.கே.நகர் பேருந்து நிலையத்திற்கு பெசன்ட் நகர்-3, கேளம்பாக்கம்-4 என மொத்தம் 7 பஸ்கள் இயக்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 310 பஸ்கள் இயக்கப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Diwali , 310 connecting buses to bus stands ahead of Diwali: MTC management announces
× RELATED தேர்தல் கெடுபிடியால் ஆட்டம் கண்ட...