×

உயிர்க்காவு வாங்கும் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை வருமா?

தமிழகத்தில் புதிய அபாயமாக ஆன்லைன் சூதாட்டம் உருவாகியுள்ளது. இந்த சூதாட்டத்தில் மூழ்கி லட்சக்கணக்கில் பணத்தை இழந்து இதுவரை 11 பேர் தற்கொலை செய்துள்ளனர். போலீஸ்காரர், கணவன்-மனைவி, கல்லூரி மாணவர் என பலதரப்பட்டவர்கள் ஆன்லைன் சூதாட்ட வலையில் சிக்கி உயிரை மாய்த்துள்ளனர். ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்த சூதாட்டத்தை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வாய்ப்புள்ளதா என்பது குறித்து அரசு தரப்பில் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

ஆன்லைன் விளையாட்டுகளில் ஆண்டுக்கு ₹25 ஆயிரம் கோடி வரை பணப்புழக்கம் நடக்கிறது. ஆந்திரா, தெலங்கானா, ஒடிசாவில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை உள்ளது. பலரது உயிரைக் காவு வாங்கி வரும் இந்த சூதாட்டத்துக்கு தமிழகத்திலும் தடை கொண்டுவர வேண்டும் என பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். ஆன்லைன் சூதாட்டத்தில் உயிரை மாய்த்தவர்களின் உறவினர்கள் இங்கு அதுபற்றிக் கூறுகின்றனர்.

மதன்குமார் வயது 28: கோவை மாவட்டத்தில் தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தார். ஊரடங்கு, பொழுதுபோக்கு, நண்பர்கள் வட்டம் குறைந்ததால் பொழுதுபோக்கிற்காக ஆன்லைன் ரம்மி விளையாட தொடங்கினார். பெற்றோர் தடுத்தபோது அவர்களிடம் ஜெயித்துவிடுவேன் என்று ஆறுதல் கூறினார். எனினும் திருமணத்துக்கு சேர்த்து வைத்த பல லட்சம் மாயமானது. திருமணம் நெருங்க நெருங்க விட்ட பணத்தை பிடிக்க முடியாத வேதனையால் தன் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விஜயகுமார் வயது 38: புதுச்சேரியை சேர்ந்த சிம் கார்டு மொத்த விற்பனையாளர். வங்கிக் கணக்கில் பல லட்சம் சேமிப்பில் இருந்தது. கொரோனா ஊரடங்கில் பொழுது போவதற்காக விளையாட துவங்கினார். கடனை விட ரம்மியில் இருந்து மீள முடியாத மனஉளைச்சல் காரணமாக தன் உடம்பில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஆனந்த் வயது 26: வாத்தலை காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். பணியில்லாத நேரத்தில் தனி அறையில் பொழுது போக்க ரம்மி விளையாட தொடங்கினார். சக போலீஸ் நண்பர்களிடம்  கடன் பெற்று அதை தர முடியாததால் தன் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வெங்கடேஷ் வயது 28: தர்மபுரியைச் சேர்ந்தவர் ஆயுதப்படை காவலர், கொரோனா சிறப்பு பணியாக சேலம் மாவட்டம் தலைவாசலில் தனக்கு ஒதுக்கிய அறையில் தங்கியிருந்தார். தனிமை இவரை ரம்மி விளையாட தூண்டியது. ஆரம்பத்தில்
சிறிய தொகை கிடைத்த ஆசையால் தொடர்ந்து விளையாடி பல லட்சங்களை இழந்தவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Tags : Will there be a ban on online gambling to buy life insurance?
× RELATED சென்னையில் 9, 13, 14, 15வது மண்டலங்கள்...