×

சென்னையில் 9, 13, 14, 15வது மண்டலங்கள் மற்றும் தாம்பரம் பகுதிகளில் நாளை முதல் ஜூன் 2ம் தேதி வரை 2 நாளுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளை : குடிநீர் வாரியம் தகவல்

சென்னை, மே 23: நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பாராமரிப்பு பணி காரணமாக, நாளை (24ம் தேதி) முதல் ஜூன் 2ம் தேதி வரை சென்னையின் 9, 13, 14, 15வது மண்டலங்கள் மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படும், என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட அறிக்கை: தென்மேற்கு பருவமழை தீவிரமடைவதற்கு முன்னதாக நெம்மேலியில் உள்ள நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில், கடல்சார் பணிகள் மற்றும் நிலைய பாராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், நாளை (24ம் தேதி) முதல் ஜூன் 2ம் தேதி வரை (10 நாட்களுக்கு மட்டும்) மண்டலம்-9 (பகுதி), மண்டலம்-13 (பகுதி), மண்டலம்-14 மற்றும் 15-க்குட்பட்ட பகுதிகள் மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படும்.

அதன்படி, தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட மந்தைவெளி, மயிலாப்பூர், ராஜா அண்ணாமலைபுரம், நந்தனம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை ஆகிய பகுதிகளிலும், அடையாறு மண்டலத்திற்கு உட்பட்ட மந்தைவெளி, பெசன்ட் நகர், மடிவின்கரை, பேபி நகர், தந்தை பெரியார் நகர், கருணாநிதி நகர், கலாஷேத்ரா காலனி, வேளச்சேரி, பள்ளிப்பட்டு, திருவள்ளுவர் நகர், ஏஜிஎஸ் காலனி ஆகிய பகுதிகளிலும், பெருங்குடி மண்டலத்திற்கு உட்பட்ட கொட்டிவாக்கம், பெருங்குடி, பாலவாக்கம், காவேரி நகர், திருமலை நகர், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், உள்ளகரம்-புழுதிவாக்கம், காமாட்சி காலனி, ஜல்லடியன்பேட்டை ஆகிய பகுதிகளிலும், சோழிங்கநல்லூர் மண்டலத்திற்கு உட்பட்ட நீலாங்கரை, சரஸ்வதி நகர், ஒக்கியம்-துரைப்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், எழில் நகர், கண்ணகி நகர், உத்தண்டி, பனையூர், காரப்பாக்கம், செம்மஞ்சேரி ஆகிய பகுதிகளிலும் மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படும்.

எனவே, பொதுமக்கள் மேற்கூறிய குடிநீர் விநியோக முறையை கவனத்தில் கொண்டு தேவையான குடிநீரை சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் கூடுதல் தகவல்களுக்கு தேனாம்பேட்டை பகுதி பொறியாளரை 81449 30909 என்ற எண்ணிலும், அடையாறு பகுதி பொறியாளரை 81449 30913 என்ற எண்ணிலும், பெருங்குடி பகுதி பொறியாளரை 81449 30914 என்ற எண்ணிலும், சோழிங்கநல்லூர் பகுதி பொறியாளரை 81449 30915 என்ற எண்ணிலும், தாம்பரம் மாநகராட்சி தலைமை பொறியாளரை 94429 76905 என்ற எண்ணிலும், செயற்பொறியாளரை 82488 88577 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் < https://cmwssb.tn.gov.in > என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்படுள்ளது.

The post சென்னையில் 9, 13, 14, 15வது மண்டலங்கள் மற்றும் தாம்பரம் பகுதிகளில் நாளை முதல் ஜூன் 2ம் தேதி வரை 2 நாளுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளை : குடிநீர் வாரியம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Chennai ,Nemmeli desalination plant ,Tambaram Municipal Corporation ,Dinakaran ,
× RELATED தாம்பரம் அருகே முடிச்சூரில் இருசக்கர...