மயிலாடுதுறை : மயிலாடுதுறை திருஇந்தளூர் கடைவீதியில் தெருமின்விளக்கு உள்ள பெரும்பாலும் மின்கம்பங்கள் இரும்பால் ஆனது. மரங்கள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால் தரையின் அடியில் உள்ள கம்பத்தின் அடிபாகம் முற்றிலும் தூருப்பிடித்து உடைந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருஇந்தளூர் ஆஞ்சநேயர் ஆயலத்திற்கு எதிர் புறத்தில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள கடையின் முன் மின்கம்பத்தின் அடிப்பாகம் துருப்பிடித்து துண்டாகி விழும் நிலை உள்ளது. அதேபோன்று ஜிடி மருத்துவமனை அருகில் உள்ள மின்கம்பம் ஒன்று அடிபாகம் முழுவதும் செரித்துவிட்டது, இதில் உள்ள மின்கம்பிகள் அருகில் உள்ள மரத்தில் இணைக்கப்பட்டதால் அதன் பலத்தால் இந்த மரம் சாயாமல் உள்ளது. வரும் காலம் மழைகாலம் என்பதால் மழை மற்றும் காற்று வேகமாக அடித்தால் மின்இணைப்புடன் மரம் சாலையிலோ அல்லது அருகில் உள்ள கடை மற்றும் வீடுகளில் சாய்வதற்கு ஏதுவாக இருக்கும். இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
எனவே உடனடியாக மயிலாடுதுறை நகராட்சி பொறியாளர்கள் திருஇந்தளூர் பகுதியில்உள்ள நகராட்சி மின்கம்பங்களை சோதனை செய்து மாற்றுவதற்கு ஏற்பாடு செய்வதுடன் தற்காலிகமாக பாதிக்கப்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து விழாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.