×

கத்திமுனையில் நகைகள் பறிப்பு

வாலாஜாபாத்: வாலாஜாபாத் பேரூராட்சி 5வது வார்டு வல்லபாக்கம் பகுதி மந்தவெளி அம்மன் கோயில் தெருவில் நேற்று அதிகாலை 2 மணியளவில் மக்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள், ஜெயக்குமார் என்பவரது வீட்டுக் கதவை கடப்பாரையால் உடைத்து உள்ளே புகுந்தனர். இதனால் வீட்டுக்குள் தூங்கியவர்கள் அலறியடித்து எழுந்தனர். அவர்களிடம், மர்மநபர்கள், கத்தி, அரிவாளை காட்டி, நகைகளை கேட்டு மிரட்டி னர். இதனால், அவர்கள் அலறி கூச்சலிட்டனர். உடனே மர்மநபர்கள், அவர்களிடம் இருந்து 4 சவரன் நகைகளை பறித்து கொண்டு தப்பினர்.
இதேபோல், பிரசாந்த் என்பவரது வீட்டில் நுழைந்த மர்மநபர்கள், 3 சவரன் நகைகளை பறித்துக் கொண்டு தப்பினர். புகாரின்படி வாலாஜாபாத் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : Flush the jewelry on the blade
× RELATED மாமூல் கேட்ட ரவுடி வெட்டிக் கொலை