×

14 வயது சிறுவன் பைக் ஓட்டியதால் தந்தைக்கு ரூ.25,000 அபராதம்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பைக் ஓட்டிச் சென்ற 14 வயது சிறுவனின் தந்தைக்கு போலீசார் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் நகர் பாலகிருஷ்ணாபுரம் மேம்பால பகுதியில் தாலுகா போலீசார் நேற்று வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த சிறுவனை மடக்கி விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்த சிறுவன் பாலகிருஷ்ணாபுரம் சிறுமணி நகரை சேர்ந்த கோபி என்பவரின் 14 வயது மகன் என்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுவனின் தந்தையை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர். 18 வயது பூர்த்தியடையாத சிறுவனை வாகனம் ஓட்டுவதற்கு அனுமதித்த குற்றத்திற்காக அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து பைக்கையும் பறிமுதல் செய்தனர்.

The post 14 வயது சிறுவன் பைக் ஓட்டியதால் தந்தைக்கு ரூ.25,000 அபராதம் appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Dindigul Nagar Balakrishnapuram Membala ,Taluk ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் பூதிபுரம் ரேஷன் கடையில் கலெக்டர் ஆய்வு