×

லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் உதவியாளர் சஸ்பெண்ட்

கடலூர்: கடலூர் மஞ்சக்குப்பம் பெண்ணை நகரை சேர்ந்தவர் செல்வம் (40). இவர் வீட்டின் பின்புறம் மரப்பட்டறை அமைக்க, வரி நிர்ணயம் செய்வதற்காக கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இதற்கு வருவாய் ஆய்வாளர் பாஸ்கரன் (55), வருவாய் உதவியாளர் லட்சுமணன் (45) ஆகியோர் ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் வருவாய் ஆய்வாளர் பாஸ்கர், உதவியாளர் லட்சுமணனை சஸ்பெண்ட் செய்து மாநகராட்சி ஆணையர் நேற்று உத்தரவிட்டார்.

The post லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் உதவியாளர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Selvam ,Manjakuppam Panna ,Cuddalore Corporation ,Bhaskaran ,Lakshmanan ,Dinakaran ,
× RELATED அதிமுகவை ஒன்றிணைப்பது தொடர்பாக...