×

எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் தங்களது அலுவலகத்திற்கு வந்தால், அதிகாரிகள் எழுந்து நின்று மரியாதை கொடுங்க!: ராஜஸ்தான் மாநில தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில தலைமைச் செயலாளர் ராஜீவ் ஸ்வரூப் அனைத்து துறைகளுக்கும் விரிவான சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் தங்களது அலுவலகத்திற்கு வந்தால், அங்குள்ள அதிகாரிகள் எழுந்து நின்று வரவேற்க வேண்டும். அவர்கள் அலுவல் தொடர்பாக பேசிவிட்டு அங்கிருந்து வெளியேறும் போது வளாகம் வரை சென்று வழியனுப்ப வேண்டும். எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் அனுப்பும் கடிதங்கள் தொடர்பாக மூத்த அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் சார்பாக கோரிக்கை கடிதம் அளித்தால், ​​அதிகாரிகள் 30 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்து அதை தீர்த்து வைக்க வேண்டும். தொலைபேசியில் செய்தி அனுப்பப்பட்டிருந்தால், அவை தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். எந்தவொரு துறையிலும் பொதுமக்களின் நலனுக்காக எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் சார்பாக கடிதம் வந்தால், சம்பந்தப்பட்ட துறை கடிதத்தை ஏற்றுக்கொண்டு பதில் அனுப்ப வேண்டும். ஏதேனும் பிரச்னை நிலுவையில் இருந்தால், அதனை எங்களிடம் தெரிவிக்க வேண்டும்’ என்று தலைமைச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.


Tags : MPs ,Chief Secretary Circular ,Rajasthan , MLAs, MPs, Office, Officers, Honors, Rajiv Swaroop
× RELATED டெல்லியில் தலைமைத் தேர்தல்...