×

கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் தர முயன்ற பாஜக வேட்பாளரிடம் இருந்து ரூ.4.8 கோடி பறிமுதல்; போலீஸ் விசாரணை..!!

பெங்களூரு: கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் கே.சுதாகரிடம் இருந்து ரூ.4.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளாவின் 20 தொகுதிகள், கர்நாடகாவில் 14 தொகுதிகள் உட்பட மொத்தம் 88 தொகுதிகளுக்கான 2ம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மக்களைவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 19ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது.

தொடர்ந்து 2வது கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியுள்ளது. இந்நிலையில், கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் கே.சுதாகரிடம் இருந்து ரூ.4.8 கோடி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில மணி நேரம் முன்பாக பாஜக வேட்பாளரிடம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து தேர்தலில் முறைகேடு செய்ய முயன்றதாக பாஜக வேட்பாளர் சுதாகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.4.8 கோடி பிடிபட்டது தொடர்பாக பாஜக வேட்பாளர் சுதாகர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக ரூ.4.8 கோடியை பாஜக வேட்பாளர் சுதாகர் கொண்டு சென்றதாக பறக்கும் படை அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் புகாரை அடுத்து மதநாயக்கனஹள்ளி போலீஸ் பாஜக வேட்பாளர் சுதாகர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றவியல் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் சுதாகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் தர முயன்ற பாஜக வேட்பாளரிடம் இருந்து ரூ.4.8 கோடி பறிமுதல்; போலீஸ் விசாரணை..!! appeared first on Dinakaran.

Tags : Karnataka ,BJP ,Chikaballapur ,Bangalore ,K. ,Sudhakar ,Kerala ,Dinakaran ,
× RELATED பிரஜ்வல் ரேவண்ணா மீது மேலும் ஒரு...