×

எஸ்பிபி சிகிச்சையில் மறைக்க எதுவும் இல்லை: எஸ்பிபி சரண் பேட்டி

சென்னை: எஸ்பிபிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக மறைக்க எதுவும் இல்லை என்று எஸ்பிபி சரண் விளக்கம் அளித்தார்.
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த கடந்த 25ம் தேதி மரணம் அடைந்தார். இந்நிலையில் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை அதிக கட்டணம் வசூலித்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதனைத் தொடர்ந்து அவரது மகன் எஸ்பிபி சரண் மற்றும் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவ குழு எஸ்பிபிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் மருத்துவமனை கட்டணம் தொடர்பாக நேற்று விளக்கம் அளித்தனர்.   எஸ்பிபி சரண் கூறியதாவது:  மருத்துவமனை கட்டணத்தை எங்களால் செலுத்த முடியவில்லை. குடியரசு தலைவரிடம் கோரிக்கை வைத்தேன் என்றெல்லாம் தகவல் பரவி வருகிறது. அது உண்மையல்ல.

மருத்துவமனை நிர்வாகத்திடம் எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்று கேட்டோம். நிர்வாகம் தரப்பில் இருந்து எந்த தொகையும் வேண்டாம் என்று கூறிவிட்டனர். மருத்துவ உதவி தொடர்பாக மட்டுமே சுகதாரத்துறை செயலரிடம் பேசியிருந்தேன். மருத்துவமனையில் எவ்வளவு தொகை செலுத்தினோம் என்பது எனது குடும்பத்திற்கும் மருத்துவமனை நிர்வாகத்திற்கும் இடையில் உள்ள தகவல். அதை பற்றி தெரிவிக்க வேண்டிய அவசியம் கிடையாது. எஸ்பிபிக்கு மிகப்பெரிய மணி மண்டபம் கட்டும் திட்டம் உள்ளது. நடிகர் அஜித் எனது தந்தையின் மீது மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளார். அவர் வந்தாலும் வரவில்லை என்றாலும் தற்போது அது பிரச்சனை இல்லை என்றார். .

மருத்துவ குழு பேட்டி: எஸ்பிபிக்கு நுரையீரல் தொற்று அதிகமாக இருந்தது. எக்ேமா சிகிச்சை, வெண்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்த அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சையின் போது ஒவ்வெரு உறுப்பும் செயலிழக்கத் தொடங்கின. மரணம் அடைவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக மூளையில் ரத்தம் கசியத் தொடங்கியது. மாரடைப்பும் மூச்சுத்திணறலும் ஏற்பட்டு அவர் மரணம் அடைந்தார்.

Tags : interview ,SBP ,SBP Charan , There is nothing to hide in SPB treatment: SPB Charan interview
× RELATED மக்களவை தேர்தலில் திமுக சார்பில்...