×

கைலாசா நாட்டில் ஹிந்து பாராளுமன்றம் அமைக்கப்படும்: நித்தியானந்தா வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் அறிவிப்பு

கைலாசா: இந்தியாவில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய சுவாமி நித்தியானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கி வருகிறார். நாட்டில் தேடப்படும் குற்றவாளி பட்டியலில் உள்ள நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்பது எந்த காவல் அமைப்புகளுக்கும் தெரியவில்லை. இதற்கிடையே நித்தியானந்தா தான் கைலாசா என்ற நாட்டை உருவாக்கி அங்கு வாழ்ந்து வருவதாக அவரே வீடியோ வெளியிட்டார். இது குறித்து நடந்த ஆய்விலும் இந்திய அதிகாரிகள் குறிப்பிடும் வகையில் எதையும் கண்டறியவில்லை. ஓரு ஆண்டுக்கு மேலாக அதிகாரிகள் நித்தியானந்தாவைத் தேடி வரும் நிலையில், செய்திகளுக்குப் பேட்டி அளிப்பது, வீடியோக்கள் வெளியிடுவது, கைலாசா நாடு குறித்து அறிவிப்புகளை வெளியிடுவது உள்ளிட்டவற்றை அவர் வாடிக்கையாக கொண்டிருந்தார்.

கைலாசா நாட்டுக்கென தனி ரிசர்வ் பேங்க், கரன்சிகள் என அதிரடி அறிவிப்பை விநாயகர் சதுர்த்தியன்று நித்தியானந்தா வெளியிட்டார். இந்நிலையில் கைலாசா நாட்டில் பாராளுமன்றம் அமைப்பது தொடர்பாக புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் கைலாசா நாட்டில் ஹிந்து பாராளுமன்றம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். இதை தொடர்ந்து விரைவில் கைலாசா நாட்டிற்கான பாஸ்போர்ட் குறித்த அறிவிப்பும் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

Tags : parliament ,Nithiyananda ,Kailash ,Announcement , Kailasa, Hindu Parliament, Nithiyananda
× RELATED மத்திய அரசு ஆலோசனை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து?