×

1800 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தனர் அமைச்சர் தா.மோ.அன்பரசன், அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

 

சென்னை: குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் இன்று (19.2.2026) தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டூர்புரம் திட்டப்பகுதியில் ரூ.307.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 1800 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில் குடிசைப் பகுதியில் வாழும் மக்கள் கான்கீரிட் வீடுகளில் வாழ வேண்டும் என்ற நல்ல நோக்கில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் குடிசைப் பகுதி மாற்று வாரியம் 1970 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு கோட்டூர்புரம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வழங்கப்பட்டது. மறுகட்டுமான திட்டத்தின் கீழ் இங்கு இருந்த 1476 குடியிருப்புகள் இடிக்கப்பட்டு 1800 குடியிருப்புகள் தூண் மற்றும் 6 தளங்களுடன் கட்டப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திருக்கரங்களால் 2.3.2026 அன்று சென்னையில் ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாமஸ் ரோடு பகுதி 1 மற்றும் 2 திட்டப்பகுதியில் 77 கோடியே 75 இலட்சம் ரூபாய் செலவில் 470 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள். பெரிய பாளையத்தம்மன் கோயில் திட்டப்பகுதியில் 5 கோடியே 72 இலட்சம் ரூபாய் செலவில் 32 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், சுபேதார் கார்டன் பகுதி 1 மற்றும் 2 திட்டப்பகுதியில் 57 கோடியே 32 இலட்சம் ரூபாய் செலவில் 300 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், அப்பாசாமி முதலி தெரு திட்டப்பகுதியில் 12 90 இலட்சம் ரூபாய் செலவில் 68 புதிய அடுக்குமாடி கோடியேகுடியிருப்புகள் மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுக்குட்பட்ட வன்னியபுரம் திட்டப்பகுதியில் 36 கோடியே 92 இலட்சம் ரூபாய் செலவில் 216 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், குயில் தோட்டம் திட்டப்பகுதியில் 65 கோடியே 2 இலட்சம் ரூபாய் செலவில் 384 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுக்குட்பட்ட கோட்டூர்புரம் திட்டப்பகுதியில் 307 கோடியே 24 இலட்சம் ரூபாய் செலவில் 1800 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், அப்பாவு நகர் சுப்புபிள்ளை தோட்டம் திட்டப்பகுதியில் 88 கோடியே 5 இலட்சம் ரூபாய் செலவில் 522 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்.

ராயபுரம் சட்டமன்றத் தொகுக்குட்பட்ட செட்டி தோட்டம் திட்டப்பகுதியில் 45 கோடியே 63 இலட்சம் ரூபாய் செலவில் 243 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், என மொத்தம் 9 திட்டப்பகுதியில் ரூ.696 கோடியே 55 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 4035 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார்கள். மேலும் துணை முதலமைச்சர் அவர்களின் திருக்கரங்களால் 28.2.2026 அன்று சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நாவலர் நெடுங்செழியன் நகர் சிந்தாதரிப்பேட்டை திட்டப்பகுதியில் 77 கோடியே 5 இலட்சம் ரூபாய் செலவில் 450 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், கொய்யாத்தோப்பு திட்டப்பகுதியில் 61 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் 324 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், காக்ஸ் குடியிருப்பு திட்டப்பகுதியில் 14 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் 78 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் என மொத்தம் 3 திட்டப்பகுதியில் ரூ.152 கோடியே 45 இலட்சம் மதிப்பீட்டில் 852 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை திறக்க உள்ளார்கள்.

கட்டப்பட்டது. கடந்த கால ஆட்சியில் 27628 குடியிருப்புகள் மட்டுமே தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்றது முதல் இன்று வரை ரூ.7932 கோடியே 79 இலட்சம் மதிப்பீட்டில் 66,755 குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளது. கடந்த கால ஆட்சியில் 6417 குடியிருப்புகள் மட்டுமே பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இந்த 5 வருடத்தில் 61,526 குடியிருப்புகள் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது 01001 தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் திருமதி ஸ்ரேயா பி. சிங் இ.ஆ.ப., அடையார் மண்டல குழு தலைவர் ஆர்.துரைராஜ் தலைமை பொறியாளர் வி.எஸ்.கிருஷ்ணசாமி, மேற்பார்வை பொறியாளர் திருமதி ஆர்.பிரமிளா, நிர்வாக பொறியாளர் விஜய்ஆனந்த் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

 

Tags : Minister ,Tha ,Mo. ANBARASAN ,MAJ. ,Superman ,Chennai ,Small and Medium Enterprises ,Medicine and Public Welfare ,Supramanian ,Tamil Nadu Urban Habitat Development Board ,Koturupuram ,Saitappettai Assembly Constituency ,
× RELATED சட்டமன்றப் பேரவையில் வினா – விடை...