×

வங்கதேச வான்வெளியில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் விமானங்கள் பறக்க அந்நாட்டு அரசு தடை விதிப்பு

 

வங்கதேசம்: வங்கதேச வான்வெளியில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் விமானங்கள் பறக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. வங்கதேச வான்வெளியை பயன்படுத்துவதற்கான நிலுவைத் தொகையை செலுத்தாததால் தடை என தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, வங்கதேச வான்வழிப் பாதை முடக்கப்பட்டதால், ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் சில விமானங்கள் மிக நீண்ட மாற்றுப்பாதைகளில் பறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால், கொல்கத்தாவில் இருந்து குவாஹட்டி போன்ற நகரங்களுக்கு மாற்றுப்பாதையில் செல்லும் விமானங்களின் பயணம் அதிக நேரம் எடுப்பதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் வழக்கமானது என்றும், இதுகுறித்து வங்கதேச அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த நடவடிக்கைகளுக்கான முழுமையான காரணம் குறித்து வங்கதேச அரசிடமிருந்து எந்தவொரு தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால், மீதமுள்ள நிலுவைத் தொகையைச் செலுத்தாததே அதற்கான காரணம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, 2025 டிசம்பர் வரையிலான வெறும் மூன்று மாதகாலத்தில் ரூ. 267.27 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக, ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் கடந்த வாரம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Bangladeshi government ,SpiceJet ,Bangladesh ,Spice… ,
× RELATED எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்புப்...