×

திருமூர்த்தி அணையிலிருந்து பாலாறு படுகை இரண்டாம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிட முதல்வர் பழனிசாமி ஆணை!

சென்னை: பாலாறு படுகை இரண்டாம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிட முதல்வர் பழனிசாமி ஆணையிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து பாலாறு படுகை இரண்டாம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடக் கோரி பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட பாலாறு படுகை வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.  வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கையினை ஏற்று, திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பாலாறு படுகை இரண்டாம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு 28.8.2020 முதல் மொத்தம் 8700 மி. கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சூலூர் வட்டங்கள் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம், பல்லடம், திருப்பூர், காங்கேயம், தாராபுரம் வட்டங்களில்  உள்ள 94,201 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை   சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல்   பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன், என கூறியுள்ளார்.


Tags : Palanisamy ,Thirumurthy Dam ,Palaru Basin Second Zone Irrigation Areas ,zone irrigation areas , Thirumurthy Dam, Palaru Bed, Irrigation Area, Water Opening, Chief Minister Palanisamy
× RELATED திருமூர்த்தி மலைக்கு வரும் சுற்றுலா...